புதிதாக மூன்று முக்கிய அமைப்புகளுக்கு இலங்கையில் தடை
தொடர்ந்தும் தடை
இதன்படி . தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு கழகம் (TRO), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் சேவ் தி பேர்ல் உள்ளிட்ட 15 அமைப்புகள் மற்றும் 55 பேர் மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
வெளியான வர்த்தமானி அறிவித்தல்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன கையொப்பமிட்டு இந்த ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
தடை நீக்கப்பட்ட அமைப்புகள்
இதேவேளை உலகத் தமிழர் பேரவை (GTF), அவுஸ்திரேலியத் தமிழர் காங்கிரஸ் (ATC), உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC), தமிழ் ஈழ மக்கள் பேரவை (TEPA), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) மற்றும் கனடியத் தமிழர் காங்கிரஸ் (CTC) ஆகியவற்றுக்க்கான தடை நீக்கப்படுள்ளது.
317 நபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.இதில் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடைப்பட்டியலில் இருந்ர் நீக்கப்பட்ட ஒருவராவார்.
தொடர்புடைய செய்திகள்
புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் டக்ளஸ் விடுத்துள்ள கோரிக்கை
புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பான ரணிலின் நகர்வை பாராட்டிய சம்பந்தன்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது ஏன்..! அரசாங்கத்திடம் எழுப்பப்பட்ட கேள்வி
புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்! அதற்கான சூழ்நிலை கிடைக்குமா..! மனோ ஆதங்கம்
