பறிமுதல் செய்த வாகனங்கள் தொடர்பாக வெளியான தகவல்
பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்கள் தொடர்பான சுங்க விசாரணை கோப்புகள் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,“பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் கொள்கலன்களை ஏலம் விடப்படும் வரை சுங்க மேற்பார்வையின் கீழ் வைத்திருப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து இலங்கை சுங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 18,000 சதுர அடியில் இந்த ஆண்டு ஜனவரி 31 வரை 435 வாகனங்களும் 91 கொள்கலன்களும் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை சுங்கம்
இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட 435 வாகனங்களில் 133 வாகனங்கள் தொடர்பான சுங்க விசாரணை கோப்புகள் காணாமல் போயுள்ளன.
அத்தோடு 261 வெவ்வேறு வாகனங்களும் 86 கொள்கலன்களும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த வாகனங்கள் மற்றும் கொள்கலன்களை சேமிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அந்த தனியார் நிறுவனத்தின் காணிக்கு இலங்கை சுங்கம் 8 கோடி ரூபாய் பெறுமதியான வாடகையை செலுத்தியுள்ளது.
மேலும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சொத்துக்கள் குறித்து உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள ஐபிசி தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் |