சட்ட விரோத மீன்பிடியை கட்டுப்படுத்த தவறிய சிறிலங்கா அரசாங்கம் - நீதிமன்ற நடவடிக்கைக்கு தயாராகும் அமைப்பு!
நீதிக்கும் சமாதானத்திற்குமான கனேடிய அமைப்பினால் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டது.
இத தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் மாலை இடம்பெற்றது.
இதன் போது, மீனவர்களையும் கடல்வளங்களையும் அழிக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வமைப்பின் இவ்வாறான செயற்திட்டத்தின் சட்டத்தரணி நாகாநந்தா தெரிவித்துள்ளார்.
கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடு
நேற்று வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் கட்சிகளாக இருந்தாலும், ஏனைய கட்சிகளாக இருந்தாலும் யாருமே நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செயற்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு ஆனால் அதனை தீர்ப்பதற்கு யாரு முன்வருவதில்லை.
ஆகவே இந்திய இழுவைப் படகு தொடர்பில் தீர்வு காண்பதற்கு நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பொருளியல் ஆய்வாளர் செல்வின், கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை, நிர்வாகிகள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்துீவு, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிகள் என முப்பது பேர் வரை கலந்துகொண்டனர்.




