ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றில் வழக்கு
srilanka
india
day
court
navy
By Vasanth
ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடற்பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் மூழ்கியதில் நான்கு மீனவர்கள் பலியாகினர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா கடற்படையினரை கைதுசெய்யக்கோரியே இந்திய உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபா 5 கோடியை இலங்கை அரசிடம் பெற்றுத்தருமாறும் இந்த மனுவில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜெய் சுகின் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி