மோடிக்கு தமிழ்த்தேசிய கட்சிகள் அனுப்பிய கடிதம்- கம்மன்பில ஆவேசம்!
இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில், 13ஆம் திருத்தச் சட்ட அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அரச தலைவரிடமே முறையிட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாது இந்தியாவிடம் அதனைக் கொண்டு செல்லக்கூடாது என்று சிறிலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு தமிழ்த்தேசிய கட்சிகள் இணைந்து நேற்று இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய தூதுவரிடம் கையளித்திருந்தன.
இது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
13 ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் அரச தலைவரிடமே முறையிட வேண்டும். மாறாக இந்தியாவிடம் முறையிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை, இந்திய ஒன்றியத்தின் ஒரு அங்கம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்த கேள்விக்குப் பதில் வழங்கிய அமைச்சா ரமேஸ்பத்திரன, 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கையில் அமுலாக்கப்பட்டிருப்பதாகவும், அதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.