புலம்பெயர் மக்களுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள புதிய திட்டம்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களை ஒரே இணையத்தளத்தினுள் ஒன்றிணைக்கும் செயற்பாடுகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுத்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் தனித்தனியான இணையத்தளங்களைக் கொண்டிருப்பதன் காரணமாக அவற்றைத் தொடர்பு கொள்வதில் புலம்பெயர் இலங்கையர் உள்ளிட்ட பல தரப்பினரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களையும் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் வசிப்போர்
அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு புதுடெல்லி, மாலைத்தீவு, நியூசிலாந்தின் வெலிங்க்டன் உள்ளிட்ட ஏழு இடங்களில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகங்கள் ஒரே இணையத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உள்நாட்டில் வசிப்போர், புலம்பெயர் இலங்கையர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தூதரக அதிகாரிகளை இலகுவாக அணுகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |