இலங்கையில் மீண்டும் கோப்பி பயிர்ச் செய்கை!
இலங்கையில் மீண்டும் கோப்பி பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக லங்கா கோப்பி சங்கத்தின் தலைவர் குஷான் சமரரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையானது கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டுள்ளது.
இதற்காக , மலையகத்தில் வெற்று நிலங்களை பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோப்பி பயிர்ச் செய்கை
தற்போது உலகளாவிய ரீதியில் தேவை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையானது கோப்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.
இந்நிலையில், கோப்பி பயிரிடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , விவசாயிகளுக்கு கற்பிக்கவும் கோப்பி பயிர்ச்செய்கை நிபுணர்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், நீண்ட கால அடிப்படையில் , ஏற்றுமதி சந்தையில் சிறிய அளவுகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய பிறீமியம் தரமான முக்கிய சந்தையை வழங்குவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். ” என லங்கா கோப்பி சங்கத்தின் தலைவர் குஷான் சமரரத்ன தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |