ட்ரம்பின் வரி விதிப்பு: ஆசியாவிலேயே ஒரே ஒரு நாடாக போராடும் இலங்கை
ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிக் கொள்கை குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடி வரும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்று அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (30) பங்கேற்ற அமைச்சர், அமெரிக்க கலந்துரையாடல்களில் சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்தார்.
ஜனாதிபதி அநுர நியமித்த குழு
அந்த நேரத்தில், இலங்கை உட்பட பல நாடுகள் மீது நேரடி வரி விதிப்பை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அந்த நேரத்தில், உலகெங்கிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் அமெரிக்க வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும் அமெரிக்க தொழில்களை ஊக்குவிப்பதும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இருப்பினும், ட்ரம்ப் விதித்த புதிய வரிக் கொள்கைகளால் ஏற்படக்கூடிய சிக்கல்களை ஆழமாக ஆய்வு செய்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஏப்ரல் 3 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்தார்.
பேச்சுவார்த்தை
அதனைதொடர்ந்து, இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, ட்ரம்ப் நாட்டின் மீது விதித்த புதிய கட்டணங்கள் குறித்து நாட்டின் நிர்வாகத்துடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகக் கூறியது.
பின்னர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், இலங்கை தூதுக்குழு கடந்த மாதம் வொஷிங்டனில் வரி தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி பேச்சுவார்த்தை நடத்தியது.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிக வரிகளை விதிப்பதைத் தடுத்து, அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் மே 28 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
