கடன் நெருக்கடி நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை - மசாடோ கனிடா
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார்.
உலக செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் நெருக்கடிக்கு சர்வதேச தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன்
அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஜப்பான் பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் சீனா மற்றும் இந்தியாவின் பங்களிப்பைப் பாதுகாக்க, பாரிஸ் சமூகக் கடனாளிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஒருங்கிணைத்து, 70 ஆண்டுகளில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் கடுமையாக உழைத்துள்ளது.”என தெரிவித்தார்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்