இயக்கச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புவிவகாரம்- முடிவின்றி தொடரும் விளக்கமறியல்; பொருளாதாரமின்றித் தவிக்கும் உறவுகள்!

arrest police sri lanka kilinochchi protest bomb blast iyakachi
By Kalaimathy Feb 26, 2022 04:41 AM GMT
Report

இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் தனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை மற்றும் அவரது தொலைபேசியில் தமது திருமண அழைப்பிதழ் இருந்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக தான் கணவர் கைது செய்யப்பட்டார் என சிறையில் உண்ணாவிரதம் இருப்பவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்களும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கடந்த புதன்கிழமை முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்திலிங்கம் நிர்மலதாஸ் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி நிர்மலதாஸ் தெரிவிக்கையில்,

நான் ஒரு முன்பள்ளி ஆசிரியர். எனது கணவர் கைதடி ஆரம்ப சுகாதார பிரிவு வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமையாற்றி வந்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.

அவருடன் நானும் சென்று இருந்தேன். விசாரணைக்கு என கணவனை உள்ளே அழைத்து சென்றிருந்தனர். சுமார் 3 மணி நேரம் நான் வெளியே காத்திருந்தேன். விசாரணைகள் முடியவடையவில்லை. பின்னர் என்னை வீடு செல்லுமாறு கூறி விட்டனர்.

அதன் பின்னர் மேலதிக விசாரணை என கணவனை வவுனியா - கொழும்பு என அழைத்து சென்றிருந்தனர். இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எமது திருமண அழைப்பிதழ் இருந்தமையே எனது கணவரின் கைதுக்கு காரணம்.

கணவர் கைது செய்யப்படும் போது , எமக்கு திருமணம் முடிந்து 157 நாட்களே ஆகி இருந்தன. கணவனை கைது செய்து 10 நாட்கள் கழித்து கணவன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என என்னிடம் கூறி இருந்தார்கள்.

ஆனாலும் கணவனை விடுவிக்கவில்லை. கணவன் கைது செய்யப்பட்டு 18 மாதங்களுக்கு பின்னர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் காலம் 14 நாட்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்பட்டு வருகிறது. எந்த வித குற்றமும் இழைக்காத எனது கணவனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என கோரியே சிறையில் கணவனும், ஆளுநர் அலுவலகம் முன்பாக நாங்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோம் என தெரிவித்தார்.

அதேவேளை சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் இரட்ணசிங்கம் கமலாகரனின் மனைவி ஈஸ்வரி கமலாகரன் தெரிவிக்கையில்,

நாங்கள் கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வசிக்கின்றோம்.  எனது கணவர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றி வந்தார். அவர் தெடர்பான அனைத்து தரவுகளும் இராணுவம் , புலனாய்வு பிரிவு என அனைத்து தரப்பினரிடமும் உண்டு.

அவ்வாறு இருக்கும் போது நாட்டுக்கு எதிராக , இராணுவத்திற்கு எதிராக எனது கணவர் எப்படி செயற்படுவார்? கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி கிளிநொச்சி காக்கா கடை சந்தி பகுதிக்கு விசாரணைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக கணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பின் பிரகாரம் விசாரணைக்கு சென்ற கணவனுடன் நானும் சென்று இருந்தேன். அங்கே விசாரித்து விட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினார்கள். நாங்கள் வீடு திரும்பினோம். அவ்வேளை எம்மை பின் தொடர்ந்து வந்த கறுப்பு நிற வாகனத்திலிருந்து இறங்கியவர்கள் எனது கணவரை பிடித்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது அடையாள அட்டையை என்னிடம் தந்தார்கள்.

நான் கணவனை அவர்களிடம் இருந்து மீட்க முயற்சி செய்தும் பயனின்றி போனது. உடனேயே கிளிநொச்சி காவல் நிலையம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகம் சென்று கேட்ட போது , தாம் யாரையும் கைது செய்யவில்லை என கூறினார்கள்.

பின்னர்  கணவனை காணவில்லை என தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சொன்னார்கள். அங்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது எமது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது வீட்டிற்கு முன்னால் வாகனங்கள் வந்து நிற்பதாகவும் , வாகனத்தில் வந்தவர்கள் வீட்டை சோதனையிடுவதாகவும் கூறினார்கள்.

அதனை அடுத்து நான் வீட்டிற்கு சென்ற போது , வீட்டின் முன்னால் எனது கணவனை அழைத்து சென்ற வாகனமும் நின்றது. பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து சென்ற போது நானும் அவர்களை பின் தொடர்ந்தேன்.

அதன் போது அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போது நான் எனது கணவரை இந்த வாகனத்தில் வந்தவர்கள் தான் அழைத்து சென்றார்கள் என அடையாளம் காட்டி கேட்ட போது அதனை அவர்கள் மறுத்தனர்.

இது தங்களின் மேலதிகாரியின் வாகனம். இதில் யாரையும் அழைத்து வரவில்லை எனத் தெரிவித்தார்கள். நான் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் காத்திருந்தேன். சில மணி நேரத்தின் பின்னர் என்னை அழைத்து அந்த வாகனத்தினை திறந்து காட்டினார்கள்.

எனது கணவர் தாக்கப்பட்ட நிலையில் அவருடைய ஆடைகள் கிழிந்த நிலையில் கணவன் கைவிலங்குடன் வாகனத்தினுள் இருந்தார். பின்னர் கணவனை கைது செய்வதாக கூறி வவுனியா - கொழும்பு என கொண்டு சென்று 18 மாதங்களின் பின்னர் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது 14 நாட்களுக்கு ஒரு தடவை விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டு வருகிறது. எமக்கு மூன்று பிள்ளைகள் மூவருமே 10 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் கல்வி பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கணவரின் கைதினால் நாம் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு முகம் கொடுத்து வருகிறோம். இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபரின் தொலைபேசியில் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்ததமையாலேயே கணவர் கைது செய்யப்பட்டார் என கூறினார்கள்.

அதுவும் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு 5 வருட கால பகுதிக்கு முன்னர் எனது கணவரின் தொலைபேசி இலக்கம் இருந்தமை குற்றம் என கைது செய்துள்ளனர்.   

எமது குடும்ப சூழல் , பிள்ளைகளின் கல்வி என்பவற்றை கருத்தில் கொண்டு எனது கணவரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன் என தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் வெளியான ஊடக செய்திகளில் "கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களை ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில்" கைது செய்யப்பட்டவர்கள் என வெளியாகி இருந்தன.

அதனை தாம் மறுப்பதாவும், தமது கணவன்மார் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்ல எனவும் தெரிவித்திருந்தனர். 


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025