மே தினத்திற்கான எதிர்ப்பை வெளியிட்டு சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் உறவுகளின் போராட்டம்!
Missing Persons
Kilinochchi
Sri Lanka
SL Protest
By Kalaimathy
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் முன்பாக A9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய மே தினத்திற்கான எதிர்ப்பை வெளியிட்டும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மே தினத்தில் போராட்டம்
தொடர்ச்சியாக 2261வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளிற்கு நீதி கோரியே இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி