எரிவாயு விலை தொடர்பில் புதிய திட்டம் - சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை!
Sri Lanka
Sri Lanka Cabinet
Government Of Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Kalaimathy
எரிவாயுக்கான செலவின் அடிப்படையிலான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒவ்வொரு மாதமும் அதனைத் திருத்துவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
விலை சூத்திரம் தயார்
அதன்படி, எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயு விலைகள் திருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு 264 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
எனவே உள்நாட்டு எரிவாயு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்