தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே தவறான கருத்துக்களை பரிமாறுகின்றனர்!
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற போது அந்த யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய நான், அதன் ஒரு அங்கமாக இருப்பதில் மகழிச்சியடைகின்றேன் என சிறிலங்கா அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விடுதலைப்புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு
இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த கால பேச்சுவார்த்தை
இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தினை நிறுத்துவதற்கான சமாதான பேச்சுக்களில் ஈடுபட்ட முக்கிய நபராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார்.
இதன் காரணமாக எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
