தேசத்தின் தந்தை மகிந்த -இளைய மகன் புகழாரம்
srilanka
mahinda
By Vasanth
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளையமகனான ரோஹித ராஜபக்ஷ, தனது தந்தை ஒரு தேசத்தின் தந்தை என்று தெரிவித்துள்ளார். தனது சகோதரர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று தனது பிறந்தநாள் வாழ்த்தை டுவிட்டரில் பதிவிடும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"எங்கள் தந்தை ஒரு தேசத்தின் தந்தையானபோது, எங்கள் மூத்த சகோதரருக்கு அப்பால் நீங்கள் ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொண்டீர்கள்.
நீங்கள் யோஷிதவுக்கும் எனக்கும் இரண்டாவது தந்தையாகிவிட்டீர்கள். எங்கள் பாதுகாவலர் மற்றும் வழிகாட்டி நீங்கள்தான்.
நீங்கள் இப்போது என் மகனுக்கு ‘லொகு தந்தை’ என்று ரோஹித ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்து.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்