யுத்தத்தை வெற்றி கொண்டதற்காக மகிந்தவை மகாராஜன் என புகழ்ந்து பாடியமைக்கு மன்னிப்பு கோரும் பாடகி!

sri lanka mahinda song war saheli gamage
By Kalaimathy Apr 15, 2022 07:19 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமைக்கு தான் பாடிய “ஆயுபோவேவா” பாடல் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருந்தால், அதற்காக சகலரிடமும் மன்னிப்பு கோருவதாக அந்த பாடலை பாடிய சஹேலி கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை மகாராஜன் என்று புகழ்ந்து பாடுவதாக ஆயுபோவேவா பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்ததுடன் இந்த பாடலை பாடிய, சஹேலி கமகேவின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டியதுடன் அதனை திறந்தும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தான் அந்த பாடலை கலைக்காக பாடிய பாடல் மாத்திரமே எனவும் அந்த பாடலை பாடியமை குறித்து மிகவும் மனம் வருந்துவதாகவும் சஹேலி கமகே தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, 

“ஆயுபோவேவா” பாடல் பற்றி நீங்கள் அறிய குறுகிய பதிவை இடுவதற்கு இதுவே பொருத்தமான சந்தர்ப்பம் என நான் உணர்கின்றேன்.

30 ஆண்டு கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது நாட்டை மீட்டதன் காரணமாக மகிழ்ச்சிக்கு உள்ளான ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் இதய துடிப்பை பாடலாக வெளியிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் எனது குரல் மூலம் பங்களிப்பை வழங்குவது கடமை என கருதினேன்.

இந்த பாடல் எந்த அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி, நான் மற்றும் எனது பெற்றோர் இணைந்து எமது பணத்தில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது உன்னத நோக்கில் உருவாக்கிய பாடல்.

இந்த பாடல் காரணமாக அப்போது இளம் யுவதியாக இருந்த நான், எதிர்நோக்கிய அவமதிப்புகள், அசௌரியங்களுக்கு முடிவு இல்லை. தற்போதும் அவை அப்படியே உள்ளன. எனது தாய் நாட்டை நான் மிகவும் நேசித்ததாலேயே அவ்வாறு பாடினேன்.

தற்போது நான் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றேன். இந்த பாடல் காரணமாகவே ஒரு பாடகியாகவும் மருத்துவராகவும் எனது பங்களிப்பை எனது நாட்டுக்கு வழங்க முடியாமல் போனது. இது இன்றும் என்னால், தாங்கிக்கொள்ள முடியாத வேதனை.

பலரும் அறிந்த ஆயுபோவேவா பாடலுடன் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்து “சத்திய ஒபாய்” என்ற பாடலை வெளியிட்டேன். எனினும் ஆயுபோவேவா பாடல் இதனையும் மீறி பிரபலமானதால், நான் அரசியல் அடிவருடி என முத்திரை குத்தப்பட காரணமாக அமைந்தது.

தற்போது எமது தாய் நாடு அடைந்துள்ள துரதிஷ்டவசமான நிலைமைக்கு நான் பாடிய ஆயுபோவேவா பாடல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்து இருக்குமாயின் அதற்காக எனது நாட்டின் சார்பில்ல் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

வெளிநாட்டில் இருந்தாலும் இலங்கையர்களான உங்களது போராட்டத்திற்கு மனபூர்வமான ஆதரவை வழங்குகிறேன். இன்றும் நாளையும் எனது தாய் நாட்டின் நலனுக்காக நடத்தப்படும் எந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் அதற்கு அச்சமின்றி எனது பங்களிப்பை வழங்குவேன்.

எனது தாய் நாடு வெல்லட்டும். உங்கள் அனைவருக்கும் வெற்றி கிட்டட்டும். பிறந்துள்ள இந்த புத்தாண்டு உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மகிழ்ச்சி நிறைந்த அதிஷ்டமான யுகத்தின் ஆரம்பமாக இருக்கட்டும் என சஹேலி கமகே தனது பதிவில் கூறியுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025