மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கா விட்டால்....! இலங்கையின் மோசமான நிலை தொடர்பில் எச்சரிக்கை
Sri Lankan protests
Ministry of Health Sri Lanka
GMOA Sri Lanka
By S P Thas
ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்குமாறு இலங்கை மருத்துவச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண மக்கள் விரும்பும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்காது போனால், தற்போதைய நிலைமையை விட வன்முறைகள் அதிகரிக்கலாம் என இலங்கை மருத்துச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மேலும் நீடித்தால், சுகாதார சேவைகள் தொடர்ந்தும் வீழ்ச்சிக்கு உள்ளாகும். தாக்குதலில் காயடைந்த 220க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மருத்துவச் சங்கம் மேலும் கூறியுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்