சிங்களத்துடன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோருக்கு செய்யும் துரோகம்!

By Kalaimathy Apr 16, 2022 11:01 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

தமிழ் தரப்புக்களால் நடத்தப்படும் இரண்டு கூட்டங்களுக்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதில் பங்கேற்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சிங்களத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், எம்.திருச்செல்வம் ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும். இரண்டு தமிழ் தரப்புகளால் இரண்டு கூட்டங்களில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். இந்த இரண்டு தரப்பும் தமிழர்களின் அரசியல் ஆசையை தீர்க்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை அழைத்து உதவி கோர முடிவு செய்தால், நாங்கள் எதிர்கால கூட்டத்தில் பங்கேற்போம்.

கடந்த 74 வருடங்களாக சிங்களவர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடுவது வீண் வேலை என வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையிலேயே வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்காக சிங்களவர்களுடன் ஒப்பந்தம் செய்வது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், எம்.திருசெல்வம் மற்றும் 1977 இல் வட்டுக்கோட்டையில் இருந்த ஏனைய தமிழ் தேசபக்தர்கள் ஆகியோருக்கு செய்யும் துரோகமாகும்.

சிங்களவர்களுடன் ஒப்பந்தம் போடுவது சர்வதேச அரங்கில் தமிழர்களை பலவீனப்படுத்தும். தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை இது உணர்த்தும். இந்த வகையான பார்வை அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அவர்களின் எதிர்கால மத்தியஸ்த நிலையை புறக்கணிக்க வைக்கும்.

மேலும் தமிழ் இளைஞர்கள் சிங்கள இளைஞர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும். தமிழ் இளைஞர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்ய இது வழி வகுக்கும்.

மேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தற்போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா தீர்மானத்தை வாபஸ் பெறுவது பற்றி சிந்திக்கலாம். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடரட்டும். இலங்கை நிதி ரீதியாக உடைந்தால், அது அவர்களை நில அபகரிப்பு, வடக்கு கிழக்கில் இலங்கை பௌத்த சின்னங்கள் கட்டுதல் மற்றும் சிங்கள இராணுவத்தை வைத்திருப்பதை நிறுத்தச் செய்யும்.

இவை நமது தாயகத்தை பொருளாதார மந்தநிலையிலிருந்தும், நமது இளைஞர்களை குற்றச்செயல்கள் மற்றும் புத்திஜீவிகள் அமைப்பொன்றும், அரசியல் கட்சி ஒன்றும் எம்மை அழைத்துள்ளனர்.

இவ்இரு அமைப்புகளும் சிங்கள தரப்போடு ஒப்பந்தம் செய்வது தமிழினத்துக்கு செய்கின்ற துரோகம் என்று நாங்கள் கூறுகின்றோம். அதாவது இந்திய அரசிற்கு கடிதம் அனுப்பிய சிவாஜிலிங்கம் தரப்பும் மற்றும் செல்வராசா கஜேந்திரன் தரப்புமே எம்மை அழைத்துள்ளனர்.

மே 18 தொடர்பாகவும் கலந்துரையாடுவதற்கு அழைத்தனர். நாங்கள் கடந்த முறை முக்கிய நிபந்தனைகளை முன்வைத்திருந்தோம். அதன் அடிப்படையில் இத்தரப்பினர் எங்களை அழைப்பது, அரசியல் ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் அதிருப்தி அடைந்திருக்கும் மக்கள் மத்தியில் தங்களை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகும்.

அவர்கள் தமிழ் மக்களிற்கு ஒரு கொள்கை ரீதியாக உண்மையான நிலைப்பாட்டை அறிவித்த பின் எம்மை சந்திப்பது பொருத்தமாக இருக்கும். ஒற்றை ஆட்சியை எதிர்க்கும் முகமாகவே சிலதரப்புகளுடன் இணைந்து செயற்பட்டோம்.

அவர்கள் எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பியிருந்தோம். ஆனால் தற்போது அவர்களது கொள்கையை தமிழ் மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ராஜதந்திர சூழலுக்கும் அவர்களது கொள்கையை அறிவிக்க வேண்டியுள்ளது. அதனாலேயே இந்த கோரிக்கையை அவர்கள் மத்தியில் முன்வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016