புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
srilanka
money
new year
By Vasanth
சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரமின்றி வாழும் மக்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு சமுர்த்தி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் படி குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்