உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
சிலாவத்தை பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவின் தீர்த்தக்கரை கொட்டுருட்டி குளத்திலேயே உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது.
இன்று காலை குளத்தில் சடலம் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி