வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை!

Ranil Wickremesinghe Ministry of Defense Sri Lanka Economy of Sri Lanka
By Beulah Nov 24, 2023 02:10 PM GMT
Report

இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று(24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : பில் கேட்ஸ் தெரிவிப்பு!

அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனிற்கு ஈடாகாது : பில் கேட்ஸ் தெரிவிப்பு!

சிறந்த தலைமைத்துவம்

 “நாரா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதுள்ள கடல்சார் வரைபடங்கள் பிரித்தானிய நீரியல் அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுகிறது.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

எனவே, எதிர்காலத்தில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்கும் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு பல சவால்களை எதிர்கொண்டிருந்த வேளையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க எனக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கினார்.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துபோனது. நாட்டு மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசையில் நின்று சோர்வடைந்தனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமையின் கீழ் நாட்டின் நிலைமை அன்றைய நிலையை விட சிறந்த நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சரியான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுப்பெற்றுள்ளது.

இராணுவம் 

நாட்டில் யுத்தம் இல்லை என்று கூறி தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதை நிறுத்த முடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடந்தபோது ஒரு தேசமாக நாம் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

ஒரு நாட்டின் இராணுவம் முழுமையாக அந்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியுள்ளது.

இனம், மதம், சாதி வேறுபாடின்றி ஒவ்வொரு பிரஜையினதும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இராணுவம் கடமைப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டின் பாதுகாப்பிற்காக அதிக நிதியை ஒதுக்குகிறது.

ஆனால் சில அரசியல்வாதிகள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகம் என்று கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்காக 423 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

இந்தளவு பாரிய தொகை முழுமையாக இராணுவத்திற்காகவே செலவிடப்படுவதாக சாதாரண மக்கள் நினைக்கின்றார்கள். இது ஒரு தவறான கருத்தாகும். இந்தக் கருத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருபத்தி மூன்று நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு ஒதுக்கப்பட்டதில் 169 பில்லியன் ரூபா மாத்திரமே ஆயுதப்படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏனைய அனைத்து நிதிகளும், உதாரணமாக அனர்த்த முகாமைத்துவம், வானிலை போன்ற பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஏனைய நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது நாம் ஆயுதப்படைகளின் Right Size என்ற சரியான அளவு தொடர்பான விடயத்தை ஆரம்பித்துள்ளோம்.

2030ஆம் ஆண்டுக்குள் 208,000 அங்கீகரிக்கப்பட்ட இராணுவப் படையினரின் எண்ணிக்கையை 100,000 ஆகக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவற்றை சரியான பொறிமுறையின்றி நடைமுறைப்படுத்த முடியாது.

பாதுகாப்பு அமைச்சு

இயற்கையான குறைவு (Natural Depreciation), மனித வளத்திற்குப் பதிலாக தொழில்நுட்பத்தை புகுத்தல், இராணுவ மதிப்புகள் (Values)மற்றும் நெறிமுறைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த செயல்முறை அறிவியல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

அரச பொறிமுறையை செயற்திறன்மிக்க வகையில் மறுசீரமைப்புச் செய்யும் பணிக்காக ஆயுதப்படை மூலம் நாட்டுக்கு நாம் வழங்கிய மிகச் சிறந்த உதாரணம் இதுவாகும்.

வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, தேசிய மாணவர் படை மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் போன்று கல்விக்காகவே ஒதுக்கப்பட்ட நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளன.

அப்படியானால் இந்த அமைச்சின் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து நேரடியாக பிள்ளைகளின் கல்விக்காக பெருமளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தவிர, இயற்கை அனர்த்தங்களால் பயிர் நிலங்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் அழிக்கப்படும் போது, பாதுகாப்பு அமைச்சின் மூலமே அவற்றுக்கான இழப்பீடுகளும் வழங்கப்படுகின்றது எனப்பதையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் மூலம் இந்நாடு பெற்றுக்கொள்ளும் வருமானத்தையும், அது தவிர்க்கும் பொருளாதார மற்றும் சமூக செலவுகளையும் பலர் புரிந்து கொள்வதில்லை.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு எமது படைவீரர்களை அனுப்புவதன் மூலம் இந்நாடு பெரும் தொகையைப் பெறுகிறது. அதிபர் இதனை விரிவுபடுத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு பாரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சுமார் 250 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதிலிருந்து நாட்டுக்கு வருமானம் கிடைப்பதோடு, உள்நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்வதைக் குறைப்பதால், நாட்டில் அதிக அளவு அந்நியச் செலாவணி சேமிக்கப்படுகிறது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மின்னணுப் பயண விளக்கப்படங்கள்

கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்தால்தான் இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படியல்ல, இலங்கைக் கடலில் நம் நாடு அமைந்திருப்பதால், நம் நாட்டுக்கு அருகில் பயணம் செய்தாலும், எமக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் உள்ளன.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

ஒவ்வொரு ஆண்டும் சுமார் நாற்பத்தைந்து கப்பல்கள் வரை நம் நாட்டின் கடல் எல்லை வழியாக பயணம் செய்கின்றன. இவற்றின் மூலம் வருமானம் பெற, நாம் மின்னணுப் பயண விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க வேண்டும்.

அந்தப் பொறுப்பை ஏற்று அந்தப் பணியைச் செய்ய நமது கடற்படை தயாராக உள்ளது. அதன் மூலம் அதிக வருமானம் பெறலாம்.

இதன் மூலம் நேரடி வருமானமாக சுமார் 200 மில்லியன் டொலர்கள் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மறைமுக வருமானம் இன்னும் அதிகமாகும்.

வளிமண்டலவியல் திணைக்களம்

தற்போது நமது வளிமண்டலவியல் திணைக்களம் மிகவும் குறைந்த தரத்தில் உள்ளது. ஏனைய நாடுகளில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட மிகச்சரியான கணிப்புகள் (Weather Intelligence) மூலம் அவர்கள் அதிக வருமானத்தைப் பெறுகிறார்கள்.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

எனவே, 2024ஆம் ஆண்டு உலக வங்கியின் கடன் உதவியின் இந்தத் துறையை நவீனமயப்படுத்த அவசியமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் கூற வேண்டும்.

இந்த வகையில், மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தல் மற்றும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், துல்லியமான முன்னறிவிப்பு மூலம் வானிலை முன்னறிவிப்புகளைப் பயன்படுத்தக் கூடிய விவசாயம், மீன்பிடி, நீர் முகாமைத்துவம், வலுசக்தி, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த செயற்பாட்டுக்கு பங்களிக்க முடியும்.

இதன் ஒரு கட்டமாக புத்தளத்தில் JICA உதவியின் கீழ் டொப்ளர் ரேடார் கட்டமைப்பும் நிறுவப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

கட்டிடக் குறியீட்டுப் பணி

மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமே மண்சரிவு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகின்றது. Building code என்ற கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான கட்டிடக் குறியீட்டை நாம் சட்டமாக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் அதிகமாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்களினால் பாரிய சிக்கல்கள் தேன்றலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

எனவே 2024 ஆம் ஆண்டு கட்டிடக் குறியீட்டுப் பணியை விரைவாக நிறைவு செய்யும் பொறுப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நாம் வழங்கியுள்ளோம்.

அதற்கேற்ப எதிர்காலத்தில் கட்டிடங்களை நிர்மாணிப்பது குறித்து தரநிலை மற்றும் பொறுப்புணர்வையும் உருவாக்க முடியும்.

மரங்கள் தொடர்பான பாதுகாப்பு

இதேபோன்று, மரங்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவிப்பு மற்றும் அபாய எச்சரிக்கைகளை வெளியிட எந்த ஒரு நிறுவனமும் இல்லை.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

தற்போது அந்தப் பொறுப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு நாம் வழங்கியுள்ளோம். இதற்கென தனியான பிரிவு உருவாக்கப்பட்டு பிரதேச செயலகப் பிரிவுகள், பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து இப்பணியை எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய மாணவர் படையணி

மேலும், தேசிய மாணவர் படையணியில் இணைய வடக்கு மற்றும் கிழக்கு மாணவர்கள் தயங்குவது குறித்தும் நாம் எமது அவதானத்தை செலுத்தியுளாளம்.

வருடாந்தம் 200 மில்லியன் டொலர்களை வருமானம் : பிரமித பண்டார தென்னகோன் முன்வைத்துள்ள யோசனை! | Sri Lanka National Hydrology Act To Boost Revenue

அவர்களையும் மாணவர் படையணியில் இணைத்துக்கொள்ள அவசியமான நடவடிக்கைகளை மெற்கொண்டு வருகின்றோம்.

அதிபர் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டுக்காகவும் நிதி ஒதுக்கியுள்ளார். இந்த செயற்பாட்டின் மூலம், சிறந்த ஆளுமை மற்றும் நல்ல தலைமைத்துவம் கொண்ட, நடைமுறை ரீதியான பிள்ளைகளை உருவாக்க முடியும்.

அதன்படி, புலனாய்வுத் துறையுடன் இணைந்து தேசிய மாணவர் படையின் புதிய சமூக புலனாய்வுப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

ஒருபுறம், பாடசாலைகளில் நடக்கும் தவறான செயல்கள், சிறுவர் வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவணை ஆகியவற்றிலிருந்து நமது இளைஞர்களையும் மாணவர்களையும் பாதுகாக்க இந்தத் திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

மரநடுகை வாரம்: றீ(ச்)ஷாவால் வழங்கி வைக்கப்பட்ட 7000 கறுவா கன்றுகள்(படங்கள்)

மரநடுகை வாரம்: றீ(ச்)ஷாவால் வழங்கி வைக்கப்பட்ட 7000 கறுவா கன்றுகள்(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024