இந்த மண் எங்களின் சொந்த மண் - உரிமைக்கான கோசங்களுடன் மாபெரும் பேரணி!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தொழிலாளர் தினம் மல்லாவியில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.
குறித்த மே தின ஊர்தி பவனியில் நில ஆக்கிரமிப்பு மற்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பவற்றுக்கெதிரான அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒற்றையாட்சிக்கு எதிரான அடையாளங்கள்
இதன் போது, ஊர்தியுடன் சென்ற மக்கள் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தமிழர் கடல், நில வளங்களை சுரண்டாதே, இந்த மண் எங்களின் சொந்த மண் போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்தி பவனி முடிவுற்ற சிவன் ஆலய வளாகத்தில், மக்கள் மத்தியில் மேதின பிரகடனம் வாசிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ், சட்டத்தரணி காண்டீபன், மற்றும் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மற்றும் இளைஞர் மற்றும் மகளிர் அணி தலைவர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட இணைப்பாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.