மாகாணசபை முறை தேவையில்லை -தேர்தலை நடத்தக்கூடாது -அரசிடம் பௌத்த அமைப்பு கோரிக்கை
#Sri Lanka #Northern Provincial Council #Election
By Vasanth
புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் வரை மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான முடிவை தாமதப்படுத்துமாறு அனைத்து இலங்கை பௌத்த காங்கிரசின் பௌத்த சாசன பணிக்குழு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட்ட சபை, புதிய அரசியலமைப்பிற்கான தங்கள் திட்டங்களை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளது. அத்துடன் மாகாண நிர்வாக முறை நாட்டிற்கு தேவையில்லை எனவும் இலங்கையின் நிர்வாகத்திற்கு மத்திய அரசும் உள்ளூராட்சி மன்ற முறையும் போதுமானது என்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை புதிய அரசியலமைப்பு வரும்வரை மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி