மாகாணசபை தொடர்பில் இந்தியாவுடன் பேசுங்கள் - தவறின் விளைவு விபரீதமாகும் - கோட்டாபய அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மாகாணசபை தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அரசாங்கத்திற்கு அட்வைஸ் தெரிவித்துள்ளார்.
“மாகாண சபை தொடர்பில் நாங்கள் தனியாக ஒரு முடிவை எடுக்க முடியாது. இது குறித்து நாங்கள் இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும், இல்லையெனில் நாங்கள் மீண்டும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் ”என்று அமைச்சர் கூறினார்.
இந்த விவகாரத்தை தனியாக முடிவு செய்ய முடியாது என்றும், இந்த செயல்முறையை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபைத் தேர்தலின் தேர்தல் முறையைத் திருத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவது மிகவும் சாத்தியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.