அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இந்தியா - கடுமையாக எதிர்க்கும் இலங்கை
India
Sri Lanka
Mahinda Amaraweera
By Vasanth
ஒரு நாட்டின் சுதந்திரத்தில் மற்றுமொரு நாடு செல்வாக்குச் செலுத்துவதை இலங்கை அரசாங்கம் எதிர்க்கிறது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒருபோதும் இந்தியா இலங்கையை அச்சுறுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க இலங்கையில் தனது கட்சியை உருவாக்க முயல்வது குறித்து வெளியான தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தனர்.
இலங்கை ஒரு ஜனநாயக சுதந்திர அணிசேரா நாடு - எந்த நாட்டுடனும் பிரச்சினையை உருவாக்க விரும்பவில்லை.
பல அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடனேயே இந்தக் கருத்துக்கள் வெளியாகியிருக்க வேண்டும் என்றார்.