சிறிலங்கா காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்று!
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகில் இந்த வாரம் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை தடுக்க உத்தரவிடுமாறு காவல்துறையினர் கோரிய கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைத் தடுக்குமாறே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலங்கம காவல்துறையினரால் தடுப்பு உத்தரவுக்கான கோரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்திக்கு அருகாமையில் நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
