நாடாளுமன்றத்தில் உடை மாற்றிய அமைச்சர் : சபாநாயகரிடம் முறைப்பாடு
நாடாளுமன்ற அறைக்குள் யாரும் ஆடையைக் கழற்ற இயலாது. ஒருவர் தனது காற்சட்டையைக் அவ்வாறு கழற்றினாலும் அதுவும் பொருத்தமற்ற செயல் தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற ஆடையை அணிந்து வருகை தந்ததாகவும் அவர் நாடாளுமன்ற அறைக்குள் வைத்து தனது மேலங்கியைக் கழற்றியதாகவும் குற்றம் சுமத்திய அவர், அது அநாகரிகமான செயல் என்பதால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போதே குறித்த அமைச்சர் தனது மேலங்கியைக் கழற்றியதாக நளின் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்கை ரத்து செய்யும் உரிமை

அத்துடன், ஒரு சபாநாயகராக உங்களுக்கும், அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்களுக்கும் பொறுப்பு உள்ளது எனத் தெரிவித்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்டதால் குறித்த அமைச்சர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது போல் அவரது வாக்கையும் ரத்து செய்யுமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் கருத்து தெரிவிக்கையில்,
“இனிவரும் காலங்களில் அவ்வாறான ஆடையை நாடாளுமன்றத்திற்குள் அணிய வேண்டாமென குறித்த உறுப்பினருக்கு நான் அறிவுரை வழங்குகிறேன், அவரின் வாக்கை ரத்து செய்யும் உரிமை எனக்கு இல்லை.” என்றார்.