சர்வதேச ரீதியில் முன்னேறியுள்ள இலங்கையின் கடவுச்சீட்டு!
2026 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 94-வது இடத்திற்கு முன்னேறி, சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த தரவரிசையைப் பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தரவரிசையின்படி, 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் 96-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையின் கடவுச்சீட்டு 2021-ல் 107-வது இடத்திலும், 2022-ல் 102-வது இடத்திலும், 2023-ல் 100-வது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது.
மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு
கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்-விசா பெறாமல் எத்தனை நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு தரவரிசையை நிர்ணயிக்கிறது.

2026-ஆம் ஆண்டின் இப்பட்டியலில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு உலகின் மிகச் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதேவேளையில், ஆப்கானிஸ்தான் 104-வது இடத்தைப் பிடித்துப் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடு மொத்தம் 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளையும் 227 பயண இடங்களையும் உள்ளடக்கி, விசா இல்லாத பயண அணுகலின் அடிப்படையில் உலகளாவிய ஒப்பீட்டை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 2 மணி நேரம் முன்