கொரோனா பாணியை பருகிய நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி
srilanka
corona virus
people
By Vasanth
தம்மிக்க பண்டாரவின் கொரோனாதொற்றுத் தடுப்பு பாணியை பருகிய நபரும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் இலங்கை மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஷிலந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது எம்பிலிப்பிட்டியவிலுள்ள இளைஞர் படை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா வைரஸுக்கு எதிராக தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணி ெதாடர்பில் கேகாலையைச் சேர்ந்த மற்றுமொரு தொழிலதிபர் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இப்பாணி போத்தலை 10,000 ரூபாவுக்கு வாங்கி பருகியிருந்தாலும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி