மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை – டலஸ் அழகப்பெரும
SRILANKA
people
dullas alahapperuma
By Vasanth
தற்போது நாட்டில் வசிக்கும் 18 மில்லியன் மக்கள் தொகையில், 1 மில்லியன் மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கம்புறுபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பலர் தேசிய அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் அவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் நெருங்கும் போது மட்டுமே, அரசியல்வாதிகள் தேசிய அடையாள அட்டை தொடர்பாகக் கூறி வாக்குகளைப் பெறுகிறார்கள் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.