வெடித்தது சர்ச்சை! புஷ்பிகாவின் தலையில் காயத்தை ஏற்படுத்திய திருமதி உலக அழகி - பொலிஸில் முறைப்பாடு
இலங்கையில் இன்று அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த விடயமாக திருமதி இலங்கை அழகிப் போட்டியில் மகுடம் பறிக்கப்பட்ட சம்பவம் உள்ளது.
அதில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றதால் போட்டியிட தகுதியற்றவர் எனக் கூறி அவரது மகுடம் பறிக்கப்பட்டு அடுத்த இடத்திலிருந்தவருக்கு அணிவிக்கப்பட்டு அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் புஷ்பிகா டி சில்வா மிகுந்த ஏமாற்றமடைந்ததுடன், மகுடத்தை அவரது தலையில் இருந்து எடுக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நாளை ஒரு ஊடக மாநாட்டைத் தொடர்ந்து மீண்டும் புஷ்பிகா டி சில்வா முடிசூட்டப்படுவார் என்று நிகழ்வு அமைப்பாளர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருமதி அழகிப்பட்டம் பறிக்கப்பட்டு அந்த இடத்திற்கு புதிய ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் புஷ்பிகா டி சில்வா முடிசூட்டப்படுவார் என்ற செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக தருமதி அழகியான ஜூரியால் இறுதி தருணத்தில் முடிவு மாற்றப்பட்டு புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த மகுடத்தை அவரே பறித்துள்ளார்.
இதையடுத்து மேடையில் ஜூரியின் நடவடிக்கை அவரை ஆதரித் சுலா பத்மேந்திரா ஆகியோருக்கு எதிராக புஷ்பிகா டி சில்வா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.