நாட்டிற்குள் கொண்டு வந்தவர்களை தூக்கிலிடுங்கள் - ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை
srilanka
matara
podujana peramuna
By Vasanth
மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையினால் அதனுடன் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இந்த தேங்காய் எண்ணெய் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது கண்டறியப்பட்டால் அதனுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்