ராஜபக்சவினர் இல்லாத அமைச்சரவை! கோட்டாபயவுக்கும் அமைச்சுப் பதவி இல்லை
புதிய அமைச்சரவையிலும் ராஜபக்சக்களுக்கு இடம் வழங்கப்படமாட்டாது கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமாத்திரமன்றி, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அமைச்சுப் பதவிகள் எதனையும் வகிக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
முன்னதாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சரவையை தெரிவு செய்வதற்கான முழு அதிகாரமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமே வழங்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நான்கு அமைச்சர்கள் இன்று அரச தலைவர் முன்னிலையில் பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.