சிறிலங்கா நாடாளுமன்றில் இழிவுபடுத்தப்படும் புத்தி ஜீவிகள்? பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் ஆதங்கம்!
சிறிலங்கா நாடாளுமன்றில் நல்ல அறிவுடைய, கல்வித் தகமையுடைய, நல்ல அனுபவமுடைய நபர்களின் அறிவு, அனுபவம் என்பன இழிவுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அவமரியாதை இழைக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நான் அரசியல் கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். அரசியலிலிருந்து விலகவில்லை. பகல் நேரங்களில் நீதிமன்றில் வழக்குகளில் முன்னிலையாகின்றேன்.
அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அத்துடன் தற்போதைய எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவ்வாறு அழைப்புக்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.