கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் - அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறும் சகல பயண முகவர் நிலையங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காக நாடு மீளத் திறக்கப்படும் எதிர்வரும் ஜனவரி 21 முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். நேற்று(11) நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதைத் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்ட பின் சுகாதார வழிகாட்டுதல்களை பயண முகவரகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலாச் சாரதிகளுக்கு அறிவுறுத்தும் முகமாக இந்த கூட்டம் நடைபெற்றது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியைப் பெறுவதும் கட்டாயமாகும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் இடங்கள் குறித்து அதிகார சபைக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.