ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

Sri Lanka Police Galle Face Protest Sri Lanka Sri Lanka Magistrate Court Galle Face Riots
By Kalaimathy Jul 01, 2022 09:32 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட முக்கிய செயற்பாட்டாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டா கோ ஹோம் எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களான லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மற்றும் யூடியூபர் ரதிந்து சேனாரத்ன ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தேடப்பட்ட கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில்  நீதிமன்றின் உத்தரவு! | Sri Lanka President Gotabaya Protest Riot Arrest

கொழும்பில் கடந்த ஜுன் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து மருதானை காவல்துறை நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிணையில் விடுதலை

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில்  நீதிமன்றின் உத்தரவு! | Sri Lanka President Gotabaya Protest Riot Arrest

இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேக நபர்களை பிரத்தியேக பிணையில் விடுவித்து உத்தரவிட்டது.

கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026