பயங்கரவாதச் சட்டங்களை நீக்க கோரப்பட்டுள்ளது சிங்கள-பௌத்த ஆதரவு!

Sri Lanka Police Sri Lankan protests Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Aug 23, 2022 06:54 AM GMT
Report

நாட்டில் பயங்கரவாதம் இல்லாத அரசியல் பின்னணியில், "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்" கீழ் மேற்கொள்ளப்படும் கைதுகள் ஊடாக சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக, சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான தொழிற்சங்கம் ஒன்று கண்டித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்த தெற்கில் உள்ள சிங்கள பௌத்த சமூகமும் முன்வர வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம் வலியுறுத்துகிறது.

வசந்த முதலிகே உள்ளிட்டோரின் விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவிடம்

பயங்கரவாதச் சட்டங்களை நீக்க கோரப்பட்டுள்ளது சிங்கள-பௌத்த ஆதரவு! | Sri Lanka Prevention Terrorism Act Protest Arrest

மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு அரசாங்கங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் பின்னணியில், பாதுகாப்புப் படையினர் இந்தச் செயலைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவர் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓகஸ்ட் 21ஆம் திகதி பொறுப்பேற்றது.

அரசாங்கத்தை மாற்றுவது மக்களின் முழுமையான உரிமை

பயங்கரவாதச் சட்டங்களை நீக்க கோரப்பட்டுள்ளது சிங்கள-பௌத்த ஆதரவு! | Sri Lanka Prevention Terrorism Act Protest Arrest

அதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராயுமாறு, காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேநாளில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்ததை நினைவுகூர்ந்த தொழிற்சங்க தலைவர், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை "சூழ்ச்சி" என அழைப்பதால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது, ஏனெனில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான உரிமை மக்களின் முழுமையான உரிமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி, "அரசுக்கு எதிரான" சூழ்ச்சி மாத்திரமே குற்றம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் உட்பட பலர் அரசாங்கம்"என்பதை அரசு என பயன்படுத்துவதால், அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை அரசுக்கு எதிரான சூழ்ச்சி என கருத முடியாது.

குற்றச்சாட்டுக்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கையாள அவசியமில்லை

பயங்கரவாதச் சட்டங்களை நீக்க கோரப்பட்டுள்ளது சிங்கள-பௌத்த ஆதரவு! | Sri Lanka Prevention Terrorism Act Protest Arrest

கைது செய்யப்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அமைதியை குலைத்ததாகவும், அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கையாள்வது அவசியமில்லை என தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அதற்குப் பயன்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர், ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025