சிறிலங்கா அரசாங்கத்திற்குள் வலுக்கும் போட்டி- மஹிந்தவின் பதவியை கைப்பற்றுவாரா பசில்?
சிறிலங்கா அரச தலைவரின் சிம்மாசன உரையை நிகழ்த்திய கோட்டாபய, “எமது அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இலவசமாக பசளையை வழங்கியது” எனக் கூறினார். இது உண்மையா?. அரசாங்கம் பசளை இறக்குமதியை 2021 ஆம் ஆண்டு மே மாதம் நிறுத்தவில்லை. 2020 ஆம் ஆண்டு மே மாதமே நிறுத்தியது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அத்துடன் அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதல் இடத்தில் பசில் ராஜபக்ச இருக்கின்றார் எனவும் நாடாளுமன்றத்தில் அரச தலைவரின் சிம்மாசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிம்மாசன உரையாற்றிய கோட்டாபய மாத்திரமல்ல, நிதியமைச்சர் வெளியிடும் வர்த்தமானி அறிவித்தல்களை கூட நாட்டில் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டாலும் அதில் கூறியவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. நாட்டில் டொலர் இல்லாத காரணத்தினால், நாட்டில் பசளை இருக்கவில்லை. நெல்லுக்கு 50 ரூபாய் என்ற உறுதியான விலையை நிர்ணயித்ததாக கோட்டாபய தெரிவித்திருந்தார்.
ஆனால் திஸ்ஸமஹாராமவில் ஒரு கிலோ பச்சை நெல் 110 ரூபாய். அக்கரைபற்றில் அறுவடை செய்யப்படும் உலர்ந்த நெல் 95 ரூபாய். அரசாங்கத்தின் விவசாய கொள்கைகளின் பிரதிபலனே இவை.