சிறையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி!
prison
phone
ranjan ramanayaka
sri Lanka
By Kalaimathy
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து கையடக்க தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்த அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநயக்கவிடமிருந்தே கையடக்க தொலைபேசி ஒன்றும், ஹேன்ட் பிரீ ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை வழங்குவதற்காக வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து மூவரடங்கிய நீதிபதிகள் முன் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்