அதிபர் மாளிகைக்குள் நுழைந்த 40 பேரை தேடி காவல் துறையினர் வலைவீச்சு
கொழும்பு கோட்டை அதிபர் மாளிகைக்குள் கடந்த ஜூலை 9ம் திகதி புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பதற்காக 40 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என, சமூகவலைத்தளங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய கொழும்பு மத்தியபிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 7 மணி நேரம் முன்