றம்புக்கனை போராட்டக் களத்தில் நடந்தது என்ன- காணொளியில் அம்பலமான காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்!
றம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்தும் கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த 33 பேரில் 20 பேர் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனவும் 13 பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வரும் 13 பொதுமக்களில் மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், றம்புக்கனையில் நேற்றைய தினம் மோதல் இடம்பெற்றதற்கான முதல் காரணத்தை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாகனத்தை மறைத்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்களை கலைப்பதற்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய முதலில் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளுமாறும், பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குமாறு அந்த அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், மக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எரிபொருள் தாங்கிக்கு தீ வைக்க முயற்சித்தமையினாலேயே காலுக்கு கீழ் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதான காரணமாக காவல்துறையினரே உள்ளளமை அம்பலமாகி உள்ளது.
மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு காவல்துறை அதிகாரி ஒருவர் உத்தரவிடும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. இதன்மூலம் காவல்துறையினர் பொய்யான குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகி உள்ளன.
