இலங்கையின் நான்காவது கடன் தவணைக்கு பச்சைக் கொடி காட்டிய ஐ.எம்.எப்
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணைக்கு இன்று (23) அனுமதி அளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் அதன் நிறைவேற்று சபையும் இதனை அங்கீகரித்ததன் பின்னர் இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2.9 பில்லியன் டொலர்
கொள்கைகளை தொடர்ச்சியாக பராமரிக்க புதிய அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பு, திட்டத்தின் நோக்கங்களை அடைய முக்கியமானது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் 2023 மார்ச் 20 ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்திருந்த இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடன் வசதி 48 மாதங்களில் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான தூதுக்குழு நவம்பர் 17 ஆம் திகதி முதல் இந்த நாட்டில் தங்கியிருந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் நேற்று (22) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |