வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : தொடர்ந்தும் முதலிடம் பிடித்த இந்தியா
2018 ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்து, இந்த வருடத்தில் செப்டம்பர் மாதத்தில் இலங்கை அதன் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை சுற்றுலா அதிகார சபையின் (SLTDAதகவலின்படி, 2025 செப்ரெம்பரில் இலங்கை மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, இது 2018 ஆம் ஆண்டின் செப்ரெம்பர் மாத சுற்றுலாப் பயணிகள் வருகையான 149,087 ஐ விட அதிகமாகும்.
தொடர்ந்தும் முதலிடத்தில் இந்தியா
அத்துடன் 2024 செப்ரெம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 30.2 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது, அந்த நேரத்தில் 122,140 வருகைகள் பதிவாகின.
செப்ரெம்பர் 2025 இல், இந்தியா 49,697 சுற்றுலா பயணிகளுடன் (31.3%) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (10,752), சீனா (10,527), ஜெர்மனி (9,344) மற்றும் அவுஸ்திரேலியா (9,105) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 1,725,494 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
