இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
Indian fishermen
Jaffna
Sri Lanka
By Aadhithya
இலங்கையில் (Sri Lanka) கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடற்றொழிலாளர்கள் அனைவரும் இன்றைய தினம் (01) விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகம்
அந்தவகையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த 20 இந்திய கடற்றொழிலாளர்களையும் நாளைய (02) தினம் இந்தியாவுக்கு (India) அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்