பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க துறைசார் மேற்பார்வை குழுவின் திட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Beulah
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு முக்கிய யோசனையொன்றினை முன்வைத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் எதிர்வரும் பாதீட்டில், உழைக்கும் போது செலுத்தும் வரியில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது.
வரி திருத்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் வரி விதிப்பு தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துவதாகவும் அந்த துறைசார் மேற்பார்வை குழு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்