யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம் (படம்)
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
India
By pavan
தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக இந்தியாவின் தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும் , திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வருமே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளார்கள்.
இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி சென்ற நிலையில் தகவல் அறிந்த தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை மீட்டு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு நாட்டின் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 123 பேர் தமிழகம் சென்று தஞ்சமடைந்து சுட்டிகாட்டத்தக்கவிடயமாகும்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்