பசுமை வலுசக்தி பயன்பாடு : இலங்கையின் நோக்கத்தை வெளிப்படுத்திய ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka
By Vanan Nov 21, 2023 12:36 PM GMT
Report

காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் போதும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் போதும் பசுமை வலுசக்தியை அதிகளவில் பயன்படுத்திக்கொள்வதே இலங்கையின் நோக்கமாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வலுசக்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்ட கால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆழமான தெரிவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வலுசக்தி மாற்றத்துக்கான சட்டம் மற்றும் பல் நிபுணத்துவக் குழு என்பவற்றை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இன்று (21) ஆரம்பமான இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாடு - 2023 இல் கலந்துகொண்டிருந்த போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

கணவனும் மனைவியும் சடலங்களாக! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

ஹைட்டஜன் வழிகாட்டல் வரைவு 

இலங்கைப் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உதவியுடன் "கிரீன்ஸ்டேட்" பசுமை வலுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

பசுமை வலுசக்தி பயன்பாடு : இலங்கையின் நோக்கத்தை வெளிப்படுத்திய ரணில் | Sri Lanka S Vision On Green Energy Use

இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்டஜன் வழிகாட்டல் வரைவு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைப் பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) மற்றும் "கிரீன்ஸ்டேட்" ஹைட்ரஜன் இந்திய நிறுவனம் ஆகிவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு அடிப்படையிலான முயற்சியாக அமைவதோடு, ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID இன் உதவியுடன் இலங்கையின் வலுசக்தி மாற்றத்துக்கான பாதையை உருவாக்கும் நோக்கில் மேற்படி வழிகாட்டல் வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : செந்தில் தொண்டமான் வெளியிட்ட தகவல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு : செந்தில் தொண்டமான் வெளியிட்ட தகவல்

உலக வெப்பநிலை

2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமைக்கு கவலை தெரிவித்த அதிபர், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பசுமை வலுசக்தி பயன்பாடு : இலங்கையின் நோக்கத்தை வெளிப்படுத்திய ரணில் | Sri Lanka S Vision On Green Energy Use

2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிபர் வலியுறுத்தினார்.

பெருமளவில் கைத்தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றாடல் மாசடைதல் குறைந்த அளவில் காணப்பட்டாலும், அதனை பொருட்படுத்தாமல் மேற்படி விடயத்திற்காக முன்வந்துள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

யாழில் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்(படங்கள்)

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி

2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்ளளவினை மூன்று மடங்கினால் அதிகரித்துக்கொள்ளுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கையினை அதிபர் ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்ததோடு, இலங்கையை பசுமை வலுசக்தி ஏற்றுமதியாளாராக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.  

பசுமை வலுசக்தி பயன்பாடு : இலங்கையின் நோக்கத்தை வெளிப்படுத்திய ரணில் | Sri Lanka S Vision On Green Energy Use

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026