ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்

Ranil Wickremesinghe Sri Lanka Maldives
By Sathangani Nov 19, 2023 03:42 AM GMT
Report

தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதார சக்தியைப் பயன்படுத்த பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (18) இடம்பெற்ற YPO Colombo Experience: Rediscover the Pearl மாநாட்டில் பிரதான உரையை ஆற்றிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் புதிய பொருளாதார மாற்றத்திற்கான தனது நோக்கை முன்வைத்த அதிபர், பிராந்திய நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய மாதிரியையும் முன்மொழிந்தார்.

ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை: பின்னணியில் வெளியான காரணம்

ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை: பின்னணியில் வெளியான காரணம்


பொருளாதார மறுசீரமைப்புகள் 

மாலைதீவின் புதிய அதிபர் கலாநிதி மொஹமட் முய்சுவிற்கும் தமக்கும் இடையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் கருத்து தெரிவித்த அதிபர், இலங்கை மற்றும் மாலைதீவுடன் இணைந்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் | Emphasizes On Economic Migration Towards Asia

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்தும், போட்டித்தன்மைகொண்ட மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மேலும் வலுசக்தி மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையை, பிராந்திய பொருட்கள் பரிமாற்ற மையமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தையும், அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, விவசாயத்தை நவீனமயமாக்குவது, காணி உரிமை தொடர்பான மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்தாக்கியது நாங்களல்லர்: நல்லாட்சி அரசே! மகிந்த குற்றச்சாட்டு

நாட்டை வங்குரோத்தாக்கியது நாங்களல்லர்: நல்லாட்சி அரசே! மகிந்த குற்றச்சாட்டு


விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக சுமார் 02 மில்லியன் ஏக்கர் காணிகளை, அந்தக் காணிகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு உரிமத்துடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், பாரியளவிலான நவீன விவசாய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது அதிபர் விளக்கினார்.

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க 

செயற்கை நுண்ணறிவுக்கு (AI) பிரவேசித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் | Emphasizes On Economic Migration Towards Asia

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்


பாரிய பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்குவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய தொழில்மயமாக்கல் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, பங்களாதேஷ், மியன்மார், கம்போடியா, லாவோஸ், கிழக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்திய நாடுகளில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து அந்த நாடுகளிலும் முதலீடு செய்ய இலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பிராந்தியத்தில் சுற்றுலாத் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்ததுடன், அதற்காக நேபாளத்தையும் ஒன்றிணைக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம்

மேலும், வங்காள விரிகுடாவை சூழவுள்ள நாடுகளுக்கிடையில் சுற்றுலா வலயத்தை உருவாக்கும் திட்டம் குறித்தும், கரீபியன் தீவுகளை விட இது மிகப்பெரிய மாற்றீடாக அமையும் எனவும் அதிபர் கருத்து தெரிவித்தார்.

ஆசியாவை நோக்கி நிகழும் பொருளாதார இடப்பெயர்வு குறித்து ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் | Emphasizes On Economic Migration Towards Asia

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தில் (RCEP) இணைவதற்கு இலங்கை தற்போது விண்ணப்பித்துள்ளது என்றும், இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் பரந்த பொருளாதார பங்காளித்துவத்தை ஏற்படுத்துவது உட்பட இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்தும் இளம் தொழில்முனைவோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் உள்ள பொருளாதார ஆற்றல்கள் குறித்து நம்பிக்கையுடன் கருத்துத் தெரிவித்த அதிபர்  ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கப்படும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தீவிரமாக பங்களிக்க வேண்டும் என்று இங்கு கூடியிருந்த இளம் தொழில்முனைவோரிடம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024