கனடாவில் இராஜங்க அமைச்சரான ஈழத்தமிழர்
Sri Lankan Tamils
Jaffna
Canada
World
By Dhilak
கனடாவின் ஒன்ராறியோ மாகாண போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றையதினம்(22.09.2023) பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மாதத்தில் மூன்றாவது அமைச்சர் பதவி விலகிய நிலையில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (doug ford) ஆல் இந்த அமைச்சர் அவை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராஜங்க அமைச்சராக
இந்த மாற்றத்தின் மூலம் scarborough - rouge park தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் போக்குவரத்து துறை இராஜங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களாவர்.
அத்தோடு இதுவரை காலமும் அவர் உட்கட்டமைப்பு அமைச்சரின் மாகாணசபை உதவியாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்