அவசரகால சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள் - கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா!

United Nations Sri Lanka Government Of Sri Lanka SL Protest State of Emergency
By Kalaimathy Aug 09, 2022 08:48 AM GMT
Report

தென்னிலங்கை முழுவதிலும் பல மாதங்களாக நடைபெற்ற வெகுஜனப் போராட்டங்களைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதுடன்,  ஜூலை 15 ஆம் திகதி பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பிவைத்தார்.

அதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வாறான நிலையில், பதில் அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஜூலை 17 ஆம் திகதி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் சிறிலங்கா நாடாளுமன்றம் ஜூலை 27ஆம் திகதி அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது.

இவ்வாறான நிலையில், சிறிலங்கா அதிகாரிகள் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும் எதிராக அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.

இது தொடர்பில் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“அவசராகால சட்டம் மூலம், ஊரடங்கு உத்தரவை விதித்து பாதுகாப்புப் படைகளுக்கும் இராணுவத்திற்கும் பரந்த மற்றும் விருப்பமான அதிகாரங்களை வழங்கும் கட்டளைச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகைய அதிகாரங்கள், நீதிமன்ற மேற்பார்வையின்றி போராட்டக்காரர்களைத் தடுத்து வைப்பதற்கும் தனியார் சொத்துக்களை சோதனை செய்வதற்கும் படையினரை அனுமதிக்கின்றன.

அரசாங்கத்தின் மீது அதிருப்தி

அவசரகால சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள் - கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா! | Sri Lanka State Of Emergency United Nation Colombo

அவசர நடவடிக்கைகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பலமுறை அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் பலனில்லை.

இந்தநிலையில், அமைதியான ஒன்று கூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதை மீறும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் உரையாடலுக்கான வழிகளை மேலும் மூடுகின்றன மற்றும் பதற்றங்கள் அதிகரிக்கும் அரசியல் சூழலை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

மார்ச் 2022 முதல் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கானோர் கொழும்பிலும் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பணவீக்கம் காரணமாக வலுவடைந்தமையே போராட்டத்திற்கு காரணம்

அவசரகால சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள் - கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா! | Sri Lanka State Of Emergency United Nation Colombo

ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் பணவீக்கம் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீடித்த மின்வெட்டு மற்றும் சட்டவிரோத நிதிப் பாய்ச்சலைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதன் எதிரொலியாக வெகுஜனப் போராட்டங்கள் வேகத்தைப் பெற்றன.

இதன்போது, பாதுகாப்புப் படையினர் அவசரகால நடவடிக்கைகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பயன்படுத்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கினர்.

ஜூலை 22 அன்று தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களின் முகாமில் காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையின் போது 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.

அமைதியான போராட்டக்காரர்கள் பாதுகாக்கப்படவேண்டும்

அவசரகால சட்டத்தின் மூலம் இராணுவத்திற்கு பரந்த அதிகாரங்கள் - கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா! | Sri Lanka State Of Emergency United Nation Colombo

இதனையடுத்து கடந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், தேசிய பாதுகாப்பை ஒரு சாக்குப்போக்காக கொண்டு கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகளை மூடிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மனித உரிமைப் பாதுகாவலர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அமைதியான போராட்டங்களின் பின்னணியில் பாதுகாக்கப்பட வேண்டும் போராட்டங்களில் பங்கேற்பதற்காக குற்றவியல் பொறுப்பை அவர்கள் எதிர்கொள்ளக்கூடாது என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கம் மீண்டும் மீண்டும் அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கையர்களுடன் திறந்த மற்றும் உண்மையான உரையாடலை நாடவேண்டும்” எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கோரியுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி