இலங்கை தேயிலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்
வரலாற்றில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய விலைக்கு இலங்கைத் தேயிலை விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் (Japan) நடந்த ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ஹந்துன்னெத்தி (Sunil Handunneththi) கொழும்பில் (Colombo) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
ஏல விற்பனை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற தேயிலை ஏல விற்பனையின் போது இதுவரை கால வரலாற்றில் விற்பனை செய்யப்பட்ட அதிகூடிய விலைக்கு இலங்கைத்தேயிலை விற்பனை செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அதற்காக நோபல் பரிசு கிடைக்கும் சாத்தியமும் காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
அமைதி முயற்சிகள்
இருப்பினும் பொருளாதாரம், பௌதீக விஞ்ஞானம், இரசாயன விஞ்ஞானம், மருத்துவத்துறை மற்றும் அமைதி முயற்சிகள் போன்றவற்றுக்கே நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.
இதனை தாண்டி அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
